உள்ளூர் செய்திகள்

குழித்துறை அருகே மின்கம்பத்தில் மோதிய டெம்போ - அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்

Published On 2022-09-15 07:08 GMT   |   Update On 2022-09-15 07:08 GMT
  • வாகனம் செல்வதற்காக திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது
  • செங்கல் சூளைகளுக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றி செல்வதால்இது போல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரி ;

குழித்துறை அருகே ஆத்துக்கடவு பகுதியில் அதிகமாக செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இன்று காலை செங்கல் சூளைக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றிக்கொண்டு குழித்துறை ஆத்துக்கடவு வழியாக டெம்போ வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்ற வாகனம் செல்வதற்காக திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் டெம்போவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மின்கம்பம் சரிந்ததால் குழித்துறை சுற்றுவட்டார பகுதிகள் சிறுது நேரம் மின் தடை ஏற்பட்டு போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வர தொடங்கியதும் டிரைவர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். மேலும் வேறு வாகனங்கள் உதவியுடன் டெம்போவை அங்கிருந்து மீட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளுக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றி செல்வதால்இது போல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News