உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதியில்லாத ரெட்டியபட்டி மயானம்

அடிப்படை வசதி இல்லாத மயானம்

Published On 2022-06-20 07:56 GMT   |   Update On 2022-06-20 07:56 GMT
  • அடிப்படை வசதி இல்லாத மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • பிணத்தை எரிக்கக்கூடிய கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள பானாமூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் தண்ணீர்வசதி, காத்திருப்போர் இருப்பிடம், ரோடு வசதி, மின்விளக்கு வசதி போன்றவை இல்லை.

பிணத்தை எரிக்கக்கூடிய கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பெரிய ஆபத்து ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். இது ரெட்டியபட்டி கிராமத்தில் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

மயானத்துக்கு செல்லும் மண் ரோடு சேதமடைந்தது இருபக்கமும் கருவேல முட்கள் வளர்ந்து இருந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் கருவேல மரத்தை அகற்றி மண் ரோட்டை சீர்படுத்தினர். தற்போது பெய்த மழையில் மயானத்திற்கு பிணத்தை எடுத்து செல்லக் கூடியவர்கள் தவறி விழக்கூடிய நிலையில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News