உள்ளூர் செய்திகள்

பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-06-10 09:41 GMT   |   Update On 2022-06-10 09:41 GMT
  • மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
  • சேவைகுறைபாடுகள் குறித்த புகார் மனுக்களை நேரடியாக அலுவலரிடம் வழங்கலாம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மக்கள் தொடர்பு முகாம் நாளை (11-ந்தேதி) குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்டவழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகல் அட்டை பெறுவது, கைபேசி எண் பதிவு மாற்றம் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகுறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதரக்குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News