உள்ளூர் செய்திகள்

மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு

Published On 2022-11-30 08:59 GMT   |   Update On 2022-11-30 08:59 GMT
  • மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
  • 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை

தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.

Tags:    

Similar News