உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று“தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2023-10-31 07:11 GMT   |   Update On 2023-10-31 07:11 GMT
  • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று"தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது.

தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும். இதை முன்னிட்டு "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன்.

சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்" என "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News