உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் துணை மேயர் தாமரை செல்வன் பேசிய போது எடுத்த படம்.

புதுச்சேரி எல்லையில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசாரை கண்டித்து போராட்டம்:

Published On 2023-04-10 06:25 GMT   |   Update On 2023-04-10 06:25 GMT
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
  • மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கடலூர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொகுதி அமைப்பாளர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய பொரு ளாளர் சம்பத், ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், ஜானகிராமன், செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நிர்வாகிகள் குணத்தொகையண், பால முருகன், தமிழரசன், அம்பேத், சக்திமுருகன், மாரிமுத்து, லிங்கேஷ், சிவசக்தி, பிரகாஷ், பழனி நாதன் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற ஏப்ரல் 14 -ந் தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது. கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வாக னங்களையும் புதுச்சேரி போலீசார் ஒரு தலை பட்சமாக பிடித்து அபராதம் விதிப்பதை கண்டித்து முள்ளோடையில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags:    

Similar News