உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் லோக் அதலாத்தில் 416 வழக்குகள் சமரச தீர்வு

Published On 2023-02-13 09:35 GMT   |   Update On 2023-02-13 09:35 GMT
பெரம்பலூரில் லோக் அதலாத்தில் 416 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் தலைமை வகித்து தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல கோர்ட் நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி ராஜமகேஸ்வர், குற்றவியல் கோர்ட் நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், கவிதா மற்றும் ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி கண்ணையன் ஆகியோர் கொண்ட 6 அமர்வுகளாக வழக்குகள் விசாரணை நடந்தது.இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 416 வழக்குகள் 4 கோடியே 55 லட்சத்து 93 ஆயிரத்து 354 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்ப்டடவரின் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டு ரூ. ஒரு கோடியே 40 லட்சத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள்,காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News