உள்ளூர் செய்திகள் (District)

மலைத்தேனி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

Published On 2023-03-25 08:23 GMT   |   Update On 2023-03-25 08:23 GMT
  • மலைத்தேனி கொட்டியதில் கோயில் பூசாரி உயிரிழந்தார்
  • 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பூலாங்குறிச்சியிலிருந்து செவ்வூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அரசினர் கலைகல்லூரி மாணவர்கள், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ஆகியோரை மலைத்ததேனீக்கள் கூட்டமாக வந்து விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. இதில் செவ்வூர் சோனையன் கோயில் பூசாரி சிவா (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மலைத்தேனீக்கள் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களையும் மழை தேனீக்கள் முகம் மற்றும் உடல்களில் கொட்டியதில் வீக்கமடைந்து மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கார்களில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த சிலரை மீட்டு பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்த சிலர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மலைத் தேனீக்கள் கொட்டி உயிரிழந்த சோனையன் கோயில் கோயில் பூசாரி சிவாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 13 பேர் பொன்னமராவதி மற்றும் பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News