உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Published On 2022-12-03 09:16 GMT   |   Update On 2022-12-03 09:16 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது
  • விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

புதுக்கோட்டை:

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமைவகித்தார். கிராம ஊராட்சி ஆணையர் குமரன் முன்னிலைவகித்தார். சமூகபாதுகாப்புத்திட்ட தாசில்தார் பழனிச்சாமி முகாமினை தொடங்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கோகிலா, எழும்பு முறிவு மருத்துவர் நெடுங்கிள்ளி , மனநலமருத்துவர் அஜய், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரவர்த்தனா, கண் மருத்துவர் அகல்யா ஆகியோர் பரிசோதனைசெய்து தேசிய அடையாள அட்டை, மருத்துவ உதவி, தேவையான உபகரணங்கள் எம்எஸ்ஐடி கிட் போன்றவைகள் வழங்கம்பணியில் ஈடுபட்டனர். இதில் துணைஆணையர்கள் கற்புக்கரசி, நல்லமுத்து, ராஜேந்திரன், சிறப்பாசிரியர்கள், தொண்டுநிறுவன பிரிநிதிகள், உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News