உள்ளூர் செய்திகள்
மின்சார சிக்கனம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
- மாணவர்கள் கவிதை மற்றும் பாட்டு மூலம் விளக்கினர்
- அனைவருக்கும் எல்இடி பல்பு பரிசாக வழங்கப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மின்சார சிக்கனம் குறித்த மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோளிங்கர் செயற்பொறியாளர் ரமேஷ் வரவேற்றார். காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் நரசிம்மன் மற்றும் துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மண்டல செயற்பொறியாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சார சிக்கனம் மற்றும் மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும் விளக்கினார்.
இதில் பள்ளி மாணவர்கள் மின் சிக்கனத்தை குறிக்கும் விதமாக கவிதை மற்றும் பாட்டு மூலம் விளக்கினர். இதில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எல்இடி பல்பு பரிசாக வழங்கப்பட்டது.