உள்ளூர் செய்திகள் (District)

ஆனங்கூர் கிராமத்தில் மண் மாதிரி சேகரித்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆனங்கூரில் தோட்டக்கலை சார்பில் மண் மாதிரி சேகரித்தல் விழிப்புணர்வு முகாம்

Published On 2022-11-18 09:37 GMT   |   Update On 2022-11-18 09:37 GMT
  • ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயிர்கள் பற்றி கூறப்பட்டது.

திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

அறிக்கையில் பயிர் சாகுபடி செய்ய உள்ள நிலத்தின் கார, அமில தன்மை, தொழு உரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்டச் சத்து மற்றும் பேரூட்டச்சத்துகள் விபரம் தெரிவிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தும் அளவு ஆகிய விபரங்களை மூத்த வேளாண்மை அலுவலர் சவுந்திரராஜன் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் அருள்ராணி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News