உள்ளூர் செய்திகள்

முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

சாமளாபுரம் பேரூராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

Published On 2023-05-09 10:45 GMT   |   Update On 2023-05-09 10:45 GMT
  • 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 75 பேர் பங்கேற்றனர்.இந்த முகாமில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர், டாக்டர்.மனிஷா, தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், மைதிலிபிரபு மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News