இந்தியா (National)

2 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் முதுகலை நுழைவுத் தேர்வு இன்று தொடக்கம்

Published On 2024-08-11 04:03 GMT   |   Update On 2024-08-11 04:03 GMT
  • இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது
  • தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது. 

Tags:    

Similar News