இந்தியா (National)

அமேதி எம்.பி. தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி?

Published On 2023-08-11 07:02 GMT   |   Update On 2023-08-11 07:33 GMT
  • அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
  • மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

லக்னோ:

2019 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

இதில் வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்றார்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை யால் ராகுல்காந்தியின் வயநாடு எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார். 137 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர் நேற்று பாராளுமன்றத்துக்கு சென்றார்.

இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் விரும்புகிறது.

அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

2024 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வலியுறுத்துவதற்காக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் குழு டெல்லி செல்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு அவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கடைசியாக நடந்த 4 பாராளுமன்ற தேர்தலில் அமேதியில் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதேபோல உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றார்.

அமேதி தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி- இராணி அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அமேதியில் முகாமிட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் அவர் தனது தொகுதிக்கு 50 முறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News