இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை - பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

Published On 2024-01-21 09:25 GMT   |   Update On 2024-01-21 09:25 GMT
  • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-இல் நடைபெறுகிறது.
  • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பிரபலங்கள், தலைவர்களுக்கு அழைப்பு.

அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேரடியாக கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் கும்பாபிஷேக நிகழ்வை ஜந்தேவாலன் கோவிலில் இருந்து பார்க்க இருக்கிறார்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பிற்காக அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

 


"500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்ததும், எனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக விரைவில் அயோத்திக்குச் செல்வேன். ஜனவரி 22-ம் தேதி, ஜந்தேவாலன் கோவில் முற்றத்தில் இருந்து கும்பாபிஷேக விழாவைக் காண இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News