இந்தியா

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம்: இந்திய போட்டி ஆணையம் விதித்தது

Published On 2022-10-21 02:42 GMT   |   Update On 2022-10-21 02:42 GMT
  • கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன.
  • இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

புதுடெல்லி :

ஆண்ட்ராய்டு செல்போன் சூழியல் அமைப்பின் பல சந்தைகளில் கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.

இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் தற்போது விதிக்கப்பட்டு உள்ளது.இதைத்தவிர நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிறுத்துமாறும், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடத்தையை மாற்றியமைக்குமாறும் கூகுள் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News