இந்தியா (National)

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடக்கம்

Published On 2023-08-23 17:10 GMT   |   Update On 2023-08-23 17:32 GMT
  • நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
  • நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது.

புதுடெல்லி:

நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி இன்று சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே, நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.

இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. லேண்டரில் இருந்து மெல்ல தரையிறங்கும் பிரக்யா, முதலில் தன்னை சுமந்த விக்ரமை படமெடுக்க உள்ளது.

முன்னதாக லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News