இந்தியா

நிலக்கரி ஊழல் வழக்கு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றவாளி- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-07-13 08:21 GMT   |   Update On 2023-07-13 08:21 GMT
  • சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
  • கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி:

சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது.

சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. காங்கிரஸ் முன்னாள் மேல் சபை எம்.பி. விஜய் தர்தாவை குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் தீர்ப்பு வழங்கினார்.

முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உள்பட மொத்தம் 7 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தர்தாவின் மகன் தேவேந்திர தர்தா, 2 சீனியர் அரசு ஊழியர்களான சிரோபா, சம்ரியா, தனியார் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டை விவரம் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News