இந்தியா

பண மோசடி தடை சட்டத்தின்கீழ் 93 சதவீதம் தண்டனை

Published On 2024-08-06 15:00 GMT   |   Update On 2024-08-06 15:00 GMT
  • அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.
  • 1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் 93 சதவீதம் வரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய இணை நிதி மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது ஜூலை 31-ந்தேதி வரை அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் அல்லது ECIRs பதியப்பட்டுள்ளன. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 93 சதவீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002-ல் இயற்றப்பட்டது. 2005 ஜூன்-1ல் அமல்படுத்தப்பட்டது.

1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது. 3725.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 4,651.68 ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 1,31,375 கோடி ரூபாய் அளவிலான் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News