இந்தியா

பாலியல் புகார்: நடிகர் முகேஷ்-க்கு முன்ஜாமின் - நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-09-05 16:05 GMT   |   Update On 2024-09-05 16:05 GMT
  • இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
  • சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பல நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.

இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன் பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நடிகரும், எம்எல்ஏ-வுமான முகேஷ் மற்றும் எடவள பாபு ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News