இந்தியா (National)

ஈரான் சூழல் - தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2024-10-02 08:20 GMT   |   Update On 2024-10-02 08:25 GMT
  • நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
  • இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

இதனால் நேற்றைய தினம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஈரான் மீது எந்நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் ஈரானுக்கு அத்தியாவசிய பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அரசு வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News