இந்தியா (National)

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2024-01-03 04:08 GMT   |   Update On 2024-01-03 04:08 GMT
  • நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு ED பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது.
  • இந்த நிலையில்தான் பத்திரிகை ஆலோசகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்க வழக்கில் இவரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தபோதிலும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் என்ற பிந்து வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அபிஷேக் பிராசாத் வீடு உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சகேப்கஞ்ச் துணை கமிஷனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அபிஷேக் பிரசாத் என்ற பிந்து

மத்திய அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் ஹேமந்த் சோரன், தனது மனைவியை முதலமைச்சராக்க இருக்கிறார் என பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் இதை முற்றிலும் மறுத்துள்ளார்.

Tags:    

Similar News