இந்தியா (National)

அரசமைப்பு, ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பவர்கள் Vs பாதுகாக்க முயற்சிப்பவர்கள்: இதுதான் தேர்தல் போட்டி- ராகுல்காந்தி

Published On 2024-04-05 07:38 GMT   |   Update On 2024-04-05 07:38 GMT
  • இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.
  • 2004-ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற வகையில் பிரசாரம் செய்யப்பட்டது. அதேபோன்று தற்போதும் பரப்பப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசும்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி செய்பவர்களுக்கும், அவைகளை பாதுகாக்க முயற்சி செய்பவர்களுக்கும் இடையில்தான் தேர்தல். இது ஒரு மோசடியான போட்டி. நியாயமான ஒன்று அல்ல. இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று தற்போதும் பரப்பப்படுகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

கருத்தியல் தேர்தலில் போட்டியிட்டுள்ளோம் என இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும். ஊடகங்களால் பரப்பப்படுவதை விட மிகவும் நெருக்கமான போட்டி. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற போகிறோம்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News