இந்தியா (National)

ஹத்ராஸ் சம்பவம்: போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாயாவதி

Published On 2024-07-06 07:13 GMT   |   Update On 2024-07-06 07:13 GMT
  • இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
  • இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.

மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News