இந்தியா

தெலுங்கானா ஐ.ஐ.ஐ.டி. பாசாரில் மாணவர் தற்கொலை: மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Published On 2022-12-19 11:27 GMT   |   Update On 2022-12-19 11:27 GMT
  • தற்கொலை கடிதத்தில் தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
  • பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும், அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.

ஐதராபாத்:

தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் ஐ.ஐ.ஐ.டி பாசார் என அழைக்கப்படும், ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுபிரசாத் என்ற மாணவர் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்துள்ளார்.

இவர் ரங்காரெட்டி மாவட்ட பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில், திடீரென அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும். அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது. இதனால், கட்டாயத்தின் அடிப்படையில் திரும்ப, திரும்ப ஒன்றை செய்யும் நிலையில் அவர் காணப்படுவார்.

இதுபற்றி நிர்மல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சல்லா பிரவீன் குமார் இன்று கூறும்போது, ஐ.ஐ.ஐ.டி. பசாரில் பானுபிரசாத் என்ற மாணவர் விடுதியில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனநிலை பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்பு, கல்லூரி நிர்வாகம் அவருக்கு 2 முறை கவுன்சிலிங் அளித்து உள்ளது. ஏனெனில் அவர் மனரீதியாக குழப்பத்தில் இருந்து உள்ளார். ஆனால், நேற்றிரவு அவர் தற்கொலை செய்து உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.

Tags:    

Similar News