இந்தியா

78-வது சுதந்திர தினம்: நாட்டு வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும் - பிரதமர் மோடி

Published On 2024-08-15 02:01 GMT   |   Update On 2024-08-15 03:27 GMT
  • இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

புதுடெல்லி:

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


2024-08-15 03:19 GMT

பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

2024-08-15 03:16 GMT

140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் - பிரதமர் மோடி

2024-08-15 03:03 GMT

நாட்டின் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இதை பொற்காலமாக பார்க்கிறோம் - பிரதமர் மோடி

2024-08-15 02:52 GMT

விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன - பிரதமர் மோடி

2024-08-15 02:48 GMT

நாட்டு வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும் - பிரதமர் மோடி

2024-08-15 02:41 GMT

நாடு முழுக்க சுய உதவிக்குழுக்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர் - பிரதமர் மோடி

2024-08-15 02:34 GMT

சுதந்திர போராட்ட வீரர்களை போன்று நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

2024-08-15 02:29 GMT

நாடு முழுவது் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ள தொடங்கியுள்ளன - பிரதமர் மோடி

2024-08-15 02:27 GMT

ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன - பிரதமர் மோடி

2024-08-15 02:26 GMT

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி

Tags:    

Similar News