பெண் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய விமானப்படை விங் கமாண்டர்.. தொடர் சித்ரவதை
- கடந்த இரண்டு வருடங்களாக தொடர் பாலியல் பலாத்காரத்துக்கும் மன ரீதியான சித்திரவதைக்கும் உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்
- எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரத் தொடங்கினேன். எனக்கு உடல் மன ரீதியிலான நேர்ந்த சித்திரவதை என்னால் விவரிக்க முடியவில்லை.
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் விமானப்படை விங் கமாண்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அதிகாரி [ flying officer] போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில் உள்ள படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக தொடர் பாலியல் பலாத்காரத்துக்கும் மன ரீதியான சித்திரவதைக்கும் உட்படுத்தியதாக அந்த அங்கு பணியாற்றி வரும் பெண் அதிகாரி புத்கம் [Budgam] காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ஆபிசர்களின் மெஸ்ஸில் வைத்து நடந்த நியூ இயர் பார்ட்டியின்போது எனக்கு பரிசு கிடைத்ததா என்று அந்த கமாண்டர் கேட்டார். நான் கிடைக்கவில்லை என்று சொன்னதும், அங்குள்ள அறையில் இருப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றார். பின் அங்கு தன்னை ஓரல் செக்ஸுக்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்தினார். என்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவர் என்னை விடவில்லை. அவரின் பிடியை விடுவித்துக்கொண்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். தொடர்ந்து அடுத்த வெள்ளிக்கிழமை அவரது குடும்பத்தினர் சென்ற பிறகு என்னை வந்து சந்திப்பதாக கூறினார்.
எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரத் தொடங்கினேன். எனக்கு உடல் மன ரீதியிலான நேர்ந்த சித்திரவதை என்னால் விவரிக்க முடியவில்லை. கடந்த ஜனவரியில முதலில் இதை வெளியில் சொல்ல முடியாமல் இருந்தேன். பின் எனது தோழிகளிடம் இதை சொன்னேன். அவர்கள் அளித்த தைரியத்தில் மேல் அதிகாரிகளிடம் இதை சொன்னேன். ஆனால் இந்த புகாரில் நான் குற்றம் சாட்டிய கமாண்டரே எனது ஸ்டேட்மெண்டை பதிவு செய்ய அனுப்பப்பட்டார்.
வேறு அதிகாரிகள் இல்லாமல் நான் எனது ஸ்டேட்மெண்டை சொல்ல மாட்டேன் என்று மறுத்தேன். பின் நிர்வாகத்தின் தவறை மறைக்க நான் அளித்த புகாரை ஓரங்கட்டி விட்டனர். மேலும் இதன்பின் நான் மீண்டும் புகார் அளித்தும் அது தட்டிக்கழிக்கப்பட்டது. எனக்கு விமாப்படையில் இருந்து ஓய்வு அளிக்கும்படி நான் பல முறை கேட்டேன். அனால் அதுவும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு நடக்கும் நிகழ்வுகளில் அந்த கமாண்டருடன் பங்கேற்க நான் வற்புறுத்தப்பட்டேன். 24 மணிநேரமும் நான் பயத்திலேயே வாழ்கிறேன் என்று போலீசில் அளித்த அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.