இந்தியா

மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றிபெறும்: சரத் பவார் பேரன் சொல்கிறார்

Published On 2024-11-12 03:25 GMT   |   Update On 2024-11-12 03:25 GMT
  • மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை.
  • தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)), மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவரை எதிர்த்து சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் யுகேந்திர பவார், மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுகேந்திர பவார் கூறுகையில் "மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை. மகா விகாஸ் அகாடி 175 இடங்கள் முதல் 180 இடங்களை பிடிக்கலாம்.

நவம்பர் 23-ந்தேதி சரியாக எத்தனை இடங்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். வெற்றி நமதே. தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இவைகள் அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். பொதுவாக இந்தியா எப்போதும் மிகப்பெரிய மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது.

இவ்வாறு யுகேந்திர பவார் தெரிவித்தார்.

Tags:    

Similar News