இந்தியா

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் பகுதி நேர ஊரடங்கு தளர்வு

Published On 2023-08-07 05:42 GMT   |   Update On 2023-08-07 05:42 GMT
  • கிழக்கு மற்றும் மேற்கு இம்பாலில் பகுதிநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது
  • தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட நிலையில் ஊரடங்கு தளர்வு நேரம் குறைப்பு

மணிப்பூரில் திடீர்திடீரென்று சில பகுதிகளில் வன்முறைகள் வெடிக்கின்றன. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில பொதுமக்களின் பயனுக்காக காலை ஐந்து மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது.

பிஷ்னுபுர் மாவட்டத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை ஐந்து மணி முதல் காலை 10.30 மணி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

நேற்று ஊரடங்கு தளர்வு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை காலை ஐந்து மணி முதல் மதியம் 3 மணி வரை இரண்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறியதால், மே 3-ந்தேதியில் இருந்து தற்போது வரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News