இந்தியா

கட்டுக்குள் வந்த நிபா வைரஸ்: கட்டுப்பாடுகளை தளர்த்த கேரள அரசு முடிவு

Published On 2024-07-29 05:48 GMT   |   Update On 2024-07-29 05:48 GMT
  • தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லை.
  • நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பரவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே ஏராளமான காய்ச்சல்கள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்கள் பரவின. அமீபிக் மூளைக்காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல் உள்ளிட் அரியவகை நோய்கள் மட்டுமின்றி நிபா வைரசும் பாதித்தது.

நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட சிறுவனின் தொடர்பு பட்டியலில் 472 பேர் இருந்தனர். அவர்களின் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிபா தொற்று பாதித்ததாக தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை. இதனால் கேரள மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிபா ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித் திருக்கிறார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சமூகஇடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News