இந்தியா

காந்தி பெயரை எடுத்துக்கொண்டாலும், கோட்சேவை இதயத்தில் வைத்திருக்கிறார்: நிதிஷ் குமாரை சாடிய தேஜஸ்வி

Published On 2024-11-12 02:24 GMT   |   Update On 2024-11-12 02:24 GMT
  • நிதிஷ் குமார் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
  • மாநிலத்தின் சமூக கட்டமைப்பு பலவீனப்படுத்தப்டுகின்றன.

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்தி யாதவ் கூறியதாவது:-

நிதிஷ் குமார் நிலையற்ற அரசியில் நிலையை கொண்டவர். நிதிஷ் குமார் மகாத்மா காந்தி பெயரை எடுத்துக் கொள்கிகிறார். ஆனால், நாதுராம் கோட்சேவை இதயத்தில் வைத்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும வகுப்புவாத சக்திகள் பீகார் மாநிலத்தில் அதிகரிப்பதற்கு நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். பீகாரில் இந்த இவைகள் அதிகரிக்க அரசு அனுமதித்துள்து. நிதிஷ் குமார் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மாநிலத்தின் சமூக கட்டமைப்பு பலவீனப்படுத்தப்டுகின்றன.

மாநிலத்தில் உள்ள மக்கள் எதிர்கொண்டு வரும் உண்மையான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்குப் பதிலாக பா.ஜ.க. தலைவர்கள் வகுப்புவாத பிரிவினைகளை தூண்டிவிடுகின்றனர். மதம் தொடர்பான பிரச்சனைகளை குறிவைத்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் பிரிவினையை கிளப்பாமல் சாமானியர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.

இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

Tags:    

Similar News