இந்தியா

பாராளுமன்றத்தில் அத்துமீறி வண்ண புகை குண்டு வீசிய விவகாரம்: பா.ஜனதா எம்.பி.யிடம் விசாரணை?

Published On 2023-12-16 07:33 GMT   |   Update On 2023-12-16 07:33 GMT
  • மக்களவையில் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
  • பாராளுமன்ற வளாகத்திலும் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசினர்.

பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் குதித்த இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மக்களவைக்குள் இருவர் செல்ல கர்நாடக மாநிலம் மைசூரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா எனத் தெரியவந்தது.

இவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது பாஸ் வழங்கிய குற்றவாளி உள்ளே. கேள்வி கேட்ட நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு போர் புகை குண்டு வீசியவர்கள். ஒருவர் மூளையாக செயல்பட்ட லலித் ஜா. மற்ற இவர்கள் லலித் ஜாவுக்கு உதவியவர்கள்.

டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News