இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை: பிரதமர் மோடி ஆவேசம்

Published On 2024-08-15 09:18 GMT   |   Update On 2024-08-15 09:18 GMT
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்.
  • இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

புதுடெல்லி:

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளித்துறை உள்பட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை நாடு காண்கிறது. ஆனால், சில கவலையான சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை நான் உணர்கிறேன். நாடு, சமூகம், நமது மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை.

குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News