இந்தியா

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Published On 2024-08-09 10:50 GMT   |   Update On 2024-08-09 10:50 GMT
  • தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம்.
  • குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் தேர்வை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தலைமை நீதபிதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது" எனத் தெரிவித்தது.

முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான NEET-UG தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தது.

Tags:    

Similar News