இந்தியா

காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது: சரத்பவார்

Published On 2022-12-30 04:08 GMT   |   Update On 2022-12-30 04:08 GMT
  • காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது.
  • சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மும்பை :

மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பிறகு, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு சென்றார். காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி அங்கு நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

விழாவில் சரத்பவார் பேசியதாவது:-

சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது. கொள்கைகளில் முரண் இருக்கலாம், ஆனாலும் நாங்கள் காங்கிரசுடன் இணைந்து பயணிப்போம்.

புனேயில் பல காங்கிரஸ் தலைவர்கள் அப்போது இருந்தனர். 'புனே என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் புனே' என இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News