இந்தியா

மேடையில் பிரதமர் மோடியின் கையை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்- வீடியோ

Published On 2024-06-19 07:27 GMT   |   Update On 2024-06-19 07:27 GMT
  • 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • மை இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று நிதிஷ் குமார் பார்த்தார்.

பீகார் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நலந்தா பல்கலைக்கழகத்தின் புதிய விளாக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி மட்டுமின்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லெகர், துணை முதல்வர்கள் சாம்ராத் சௌத்ரி மற்றும் விஜய் சின்கா ஆகியோருடன் 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பிரதமர் மோடியின் அருகில் முதல்வர் நிதிஷ் குமார் அமர்ந்து இருந்தார். நிகழ்ச்சியின் இடையே திடீரென பிரதமர் மோடியின் இடது கையை நிதிஷ் குமார் இழுத்துப்பிடித்தார். பிறகு, அவரின் கைவிரலில் வாக்குப்பதிவின் போது வைக்கப்பட்ட மை இருக்கிறதா அல்லது அழிந்துவிட்டதா என்பதை நிதிஷ் குமார் பார்த்தார்.

இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி முகத்தில் லேசான புன்னகையை வெளிப்படுத்தி, அமைதியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


Tags:    

Similar News