செய்திகள்
புனே அணியில் அஸ்வினுக்குப் பதிலாக 17 வயதான வாஷிங்டன் சுந்தர் தேர்வு
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் அஸ்வினுக்குப் பதிலாக 17 வயதான தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரை புறக்கணித்துள்ளார்.
முக்கிய சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அஸ்வின் இடத்தை ஓரளவிற்கு நிரப்புவதற்கான மாற்று வீரரை அந்த அணி தேடி வந்தது.
புனே அணியின் கேப்டன் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை எடுப்பதற்கு பரிந்துரை செய்தார். அணி நிர்வானம் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ஜம்மு- காஷ்மீரின் பர்வேஸ் ரசூல் ஆகியோரை ஒத்திகைக்கு அழைத்தது.
இறுதியில் தமிகழத்தின் 17 வயதான வாஷிங்டன் சுந்தரை அஸ்வினுக்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.
அஸ்வினுக்குப் பதிலாக தேர்வானது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘புதிய உலகமான ஐ.பி.எல். தொடரில் விளையாட இருப்பதை உண்மையிலேயே உற்காகமாக உணர்கிறேன். அஸ்வின் ஒரு ஜாம்பவான், அவர் இல்லாததால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பு என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்தது’’ என்றார்.