கிரிக்கெட் (Cricket)

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் - கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்

Published On 2024-09-28 09:36 GMT   |   Update On 2024-09-28 09:36 GMT
  • ஆசியாவில் 420 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.
  • ஆசியாவில் 612 விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 2-ம் நாள் ஆட்டமும் மழையால் கைதுசெய்யப்பட்டது.

இப்போட்டியின் வங்கதேச கேப்டன் சாண்டோவின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.

ஆசியாவில் 420 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆசியாவில் 419 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார்.

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News