கிரிக்கெட் (Cricket)

கான்பூர் டெஸ்ட்: மழையால் ஒரு பந்து கூட வீசாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Published On 2024-09-28 09:11 GMT   |   Update On 2024-09-28 09:11 GMT
  • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி பாதிக்கப்பட்டது.

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்று 2-ம் நாள் ஆட்டம் துவங்கவிருந்த நிலையில், மைதானத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News