கிரிக்கெட் (Cricket)

இந்தியா வரும் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள்.. அட்டவணையை மாற்றிய பிசிசிஐ

Published On 2024-08-14 04:53 GMT   |   Update On 2024-08-14 04:53 GMT
  • உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ மாற்றியது.
  • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.

இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. மாற்றப்பட்ட அட்டவணைப்படி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் நடைபெற இருக்கிறது.

முன்னதாக இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்தது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.

மாற்றப்பட்ட அட்டவணை:

அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இதில் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்க இருந்த முதலாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதேபோன்று முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதியும், மற்ற இரண்டு டி20 போட்டிகள் முறையே அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

வங்காளதேசத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.

இதில் டி20 தொடர் ஜனவரி 22, ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் போட்டியும், பிப்ரவரி 9 மற்றும் பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் மற்ற இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

Tags:    

Similar News