விளையாட்டு
null

பாரா ஒலிம்பிக்- தொடர் பதக்கங்களை வெல்லும் இந்திய அணி

Published On 2024-09-02 00:00 GMT   |   Update On 2024-09-02 01:37 GMT
  • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
  • இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி-47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.   

இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News