செய்திகள்

சாமி சிலையை செல்போனில் படம் பிடித்த பெண் கன்னத்தில் அறைந்த கோவில் நிர்வாகி

Published On 2018-06-01 04:23 GMT   |   Update On 2018-06-01 04:23 GMT
அவினாசி அருகே சாமி சிலையை செல்போனில் படம் பிடித்த பெண்ணை பக்தர்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் கோவில் நிர்வாகி கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோட்டில் சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று வியாழக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து இருந்தனர்.

அப்போது ஒரு இளம்பெண் அலங்கார தோற்றத்தில் இருந்த சாய்பாபா சிலையை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த கோவில் நிர்வாகி அப்பெண் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் கூறும் போது, அப்பெண் ஆர்வ கோளாறு காரணமாக சாமியை படம் பிடித்து இருக்கலாம். அவ்வாறு செய்வது தவறு என்று அப்பெண்ணை கண்டித்து இருக்கலாம்.

அதை விட்டு கோவில் நிர்வாகியே பக்தர்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் அப்பெண்ணை கன்னத்தில் அறைந்து இருக்கக்கூடாது என்றனர்.

இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News