செய்திகள்

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரிக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

Published On 2019-05-14 10:06 GMT   |   Update On 2019-05-14 10:06 GMT
பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரிக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி படகு சவாரி தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றபோது 2 படகுகள் ஒன்றோடொன்று மோதின.

இதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம போலீசார் வழக்குப்பதிவு செய்து பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், நடுவூர் மாதாகுப்பத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஒ. நந்தகுமார் கூறியதாவது:-

பழவேற்காட்டில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் தடையை மீறி படகு சவாரி செய்தால் படகு ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களது படகு பறிமுதல் செய்யபடும். அங்கு ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். படகு சவாரியை தடுக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சனி, ஞாயிறு இதுகுறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News