தி.மு.க.வினரை கண்டித்து போராட்டம்- அண்ணாமலை உள்பட 370 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு
- பாரதிய ஜனதா மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் முன்னணி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
சென்னை:
தி.மு.க. பிரமுகரான சைதை சாதிக், பாரதிய ஜனதாவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகிய 4 பேரை பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சைதை சாதிக்கின் பேச்சை கண்டித்து நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் முன்னணி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 370 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 143, 290, 353, 341 உள்பட 6 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.