தமிழ்நாடு

ஜெயங்கொண்டத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2024-11-15 04:30 GMT   |   Update On 2024-11-15 06:23 GMT
  • பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.
  • குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர், பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஜெயங்கொண்டம் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் நடந்தே சென்று பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மழை லேசாக தூறியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.

அப்போது அங்கு நின்றிருந்த தாய்மார்களிடம் சிறிது நேரம் உரையாடினார். மேலும் குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ சிலையை அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News