தமிழ்நாடு

ஜாபர் சாதிக் வழக்கு: கோடிக்கணக்கான பணம் ஜோசப்பின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம்- அமலாக்கத்துறை

Published On 2024-07-16 08:20 GMT   |   Update On 2024-07-16 08:20 GMT
  • சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
  • உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதி்க் போதைப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய, சென்னை ஆவடியை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப்பின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News