தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லுமா? நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

Published On 2022-09-01 14:23 GMT   |   Update On 2022-09-01 14:23 GMT
  • தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
  • நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

சென்னை:

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை காலை 10.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

Tags:    

Similar News