செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2019-02-27 05:28 GMT   |   Update On 2019-02-27 05:28 GMT
தென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். #SouthAfricaElection #CyrilRamaphosa
கேப் டவுன்:

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவ்வகையில் மே 8-ம் தேதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கின.

இந்நிலையில், மே 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிபர் சிரில் ராமபோசா முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போடுவதற்கு ஏதுவாக, மே 8-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.



தற்போதைய அதிபரும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராமபோசா, மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகியதைத் தொடர்ந்து, ராமபோசா அதிபர் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. #SouthAfricaElection #CyrilRamaphosa

Tags:    

Similar News