உலகம் (World)

பிரதமர் மோடியை அழைக்க வேண்டிய நேரத்தில் மறதியால் தடுமாறிய ஜோ பைடன்

Published On 2024-09-23 03:51 GMT   |   Update On 2024-09-23 03:56 GMT
  • பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார்.
  • வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. அவர் வயது மூப்பு காரணமாக மறதியால் அவதிப்படுகிறார். அந்த குறைபாட்டால், ஜனாதிபதி தேர்தலில் இருந்தும் அவர் விலக வேண்டியதாகி விட்டது. பிற நாட்டு தலைவர்களின் பெயரை அவர் மாற்றிக் கூறுவதும், அச்சிட்ட உரையில் அதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் திருத்துவதும் வழக்கம்.

இந்நிலையில், அமெரிக்காவில் டெலவர் மாகாணத்தில் 'குவாட்' மாநாடு நடந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை அறிமுகப்படுத்த வேண்டிய நேரத்தில், அவரது பெயரை மறந்து விட்டார்.

''அடுத்து யாரை நான் அறிமுகப்படுத்த வேண்டும்?'' என்று மைக்கில் கேட்டார். சிறிது இடைவெளி விட்ட பிறகும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. ''அடுத்து யார்?'' என்று ஒரு ஊழியரை கேட்டார்.

ஜோ பைடன் சார்பில் அந்த ஊழியர், பிரதமர் மோடியை பேச அழைத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.

''பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார். ஒட்டுமொத்த உலகமும் நம்மைப்பார்த்து சிரிக்கிறது'' என்று அமெரிக்கர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News