உலகம் (World)

நம் நாட்டிற்காக உயிரை விட முடியாது... ஆனால் வாழ முடியும்- பிரதமர் மோடி

Published On 2024-09-23 02:46 GMT   |   Update On 2024-09-23 02:46 GMT
  • நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை.
  • மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர்.

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற பிரதமர் மோடி அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் முதல் பிரதமரான தன்னால் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க முடியாது, ஆனால் நிச்சயமாக நாட்டிற்காக வாழ முடியும்.

சுயராஜ்ஜியத்திற்காக (சுய ஆட்சி) என் உயிரைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், சு-ராஜ் (நல்லாட்சி) மற்றும் வளமான நாட்டிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நான் முடிவு செய்துள்ளேன்.

நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை, ஆனால் நான் அதைச் செய்தபோது குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தேன்.

அப்போது மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர். ஆனால், நாடு முழுவதும் பயணம் செய்து நான் கற்றுக்கொண்டதுதான் எனது ஆட்சி மாதிரியை வலுவாக மாற்றியது. இந்த மூன்றாவது தவணையில் நான் மூன்று மடங்கு பொறுப்புடன் முன்னேறி வருகிறேன் என்றார்.

Tags:    

Similar News